#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜவான் டிரைலர் எப்போது?.. ஷார்ட் மெசேஜில் கியூட் பதில் சொன்ன படக்குழு.!
ஷாருக்கான், நயன்தாரா, விஐய் சேதுபதி, விஜய், தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
அனிருத்தின் இசையில், ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் படம் தயாராகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஷாருக்கானின் அட்டகாசமான நடிப்பு காரணமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் படத்தின் டிரைலர் கேட்டு படக்குழுவை தொந்தரவு செய்து வரும் நிலையில், படக்குழு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்பதை நேரடியாக கூறாமல் வீடியோ ஒன்று வெளியிட்டு காத்திருங்கள் என்று கூறியுள்ளது. இதனால் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
Stay Tuned...#JawanTrailer pic.twitter.com/BqM0kmxHLQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 8, 2023