#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திரும்ப வந்துட்டேன்.. பிரசவத்திற்கு பிறகு மாடர்னாக ஜெனிபர் வெளியிட்ட முதல் புகைப்படம்! எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவர் இதற்கு முன்பு ஏராளமான படங்களில் முக்கிய சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெனிஃபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.
அதுமட்டுமின்றி அவர் தான் கர்ப்பமாக இருப்பதாலும், சீரியலில் தனது கதாபாத்திரத்தை நெகட்டிவ்வாக மாற்றுகிறார்கள் எனவும் கூறி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ரேஷ்மா, ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்த ஜெனிஃபர் தனது கர்ப்ப கால போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிலையில் ஜெனிபருக்கு இரு வாரங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார். இந்த நிலையில் ஜெனிஃபர் தற்போது எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து, டெலிவரிக்கு பிறகு திரும்ப வந்துட்டேன் என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.