#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள்? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் கோடை விடுமுறையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த 2 திரைப்படங்களுக்குமே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார்.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா நேரடி ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கால கதைக்களத்தை கொண்டு உருவாக்க உள்ள படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.