கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காதில் சீல் வடிந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்? விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், சிறுநாகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் கலியன். இவரின் மகன் மணிராஜ் (24). இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். மணிராஜின் மனைவி ராஜேஸ்வரி (21). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 3 வயதுடைய ராதிகா, 5 மாதமுடைய லாவண்யா என 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
மணிராஜ் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று ஆடு மேய்க்கும் பழக்கத்தை கொண்டிருந்த நிலையில், ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, ராஜேஸ்வரி நேற்று வடலூர் காவல்நிலையம் சென்றார்.
அப்பாவி கணவர், மனைவி கொடுத்த அதிர்ச்சி
அங்கு தனது கணவர் மணிராஜ், 2 நபர்களுடன் வைத்து கைக்குழந்தையாக லாவண்யாவை தூக்கி சென்றுவிட்டார். குழந்தையை மீட்டுத்தர வேண்டும் அவர் தற்போது தொழுதூரில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி அடித்தே கொலை; கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்.!
இதனையடுத்து, மணிராஜை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணிராஜுக்கும் - அவரின் மனைவி கூறிய புகாருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது. இதனால் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடந்தபோது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
பொய்யான தகவல்
அதாவது, குழந்தையின் காதில் சீல் வடிந்த நிலையில், அதற்கு தாய் மருந்து போட்டுள்ளார். சிறிது நேரத்திற்குள்ளாக குழந்தை மூச்சுத்திணறி மயங்க, குழந்தை இறந்துவிட்டதாக எண்ணி வடலூர்-கடலூர் சாலையில் இருக்கும் அய்யனேரி கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசி பின் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் அய்யனேரிக்கு சென்று பார்த்தபோது குழந்தை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தையின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
அப்போது, ராஜேஸ்வரி பொய்யான தகவலை பகிர்ந்ததும் அம்பலமானது. அதாவது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்து, பின் அதன் உடலை சாக்கடையில் வீசி இருக்கிறார் என்பது அம்பலமானது. இதனால் ராஜேஸ்வரியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போதையில் மனைவியை கொல்ல முயன்ற கணவர்; இறுதியில் பரிதாப பலி.. குடிகாரனால் பத்ரகாளியான பெண்.!