#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடை மாற்றும் இடத்தில் கேமரா வச்சு பிளாக்மெயில்.., - "கனா காணும் காலங்கள்" நந்தினி உருக்கம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற வெப்தொடர் கனா காணும் காலங்கள். இதன் இரண்டாவது பாகத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தேஜா வெங்கடேஷ்.
இவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றார். மேலும் யூடியூபிலும் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தேஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அதில், "நான் பல ஆடிஷனக்கும் வாய்ப்பு தேடி சென்றுள்ளேன்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஆடிஷனில் என்னை அவர்களுடைய இடத்தில் டிரஸ் மாற்றும் படி கூறினார்கள். ஆனால் எனக்கு அந்த இடம் பிடிக்காததால் மறுத்து அருகில் உள்ள 'காபி டே'-வில் உடை மாற்றிக்கொண்டேன்.
பின் டைரக்டர் என்னை இடுப்பு தெரியும்படி புடவை அணிய கூறியதால் நான் கோபப்பட்ட அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அடுத்த நாள் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பெண் ஒருவர் எனக்கு கால் செய்தார்.
அவர் டிரஸ் மாற்றும் இடத்தில் கேமரா இருப்பதாகவும், அதனை வைத்து பெண்களை பிளாக்மெயில் செய்கிறார்கள் என்றும் என்னிடம் கூறி அழுதார். இதை அறிந்தபின் நான் ஒரு வருடம் மீடியாவை விட்டு விலகி சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்டேன்.
என் வாழ்க்கையில் ஒரு நிமிடம் நான் யோசிக்காமல் அங்கே இருந்திருந்தால் வாழ்க்கையே வீணாகியிருக்கும். பின் நாட்கள் செல்ல செல்ல என் உள்மனம் கூறியதை கேட்டு மீண்டும் நடிக்க வந்தேன்" என்று உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.