#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்கிறாரா இந்த குக் வித் கோமாளி பிரபலம்! அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வித்தியாசமாக, அசத்தலாக சமைத்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று டைட்டிலை தட்டிச் சென்றவர் கனி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காரக்குழம்பு கனி என செல்லமாக அழைக்கப்படும் இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் ஆவார். மேலும் நடிகைகள் விஜயலக்ஷ்மி மற்றும் நிரஞ்சனாவின் மூத்த சகோதரியும் ஆவார். இவர் ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி கனி விஜய் டிவியில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என சமீபகாலமாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து கனி சமீபத்தில் ரசிகர்களுடன் வீடியோவில் கலந்துரையாடிய போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து தன்னிடம் யாரும் பேசவில்லை எனவும், இந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் அப்போது பார்ப்போம் எனவும் கூறியுள்ளார்.