#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணகி படத்தின் "ங்கொப்புரானே" பாடல் வெளியீடு: வைரலாகும் வீடியோ.!
4 பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இயக்குனர் யஷ்வந்த் கிஷோரால் எடுக்கப்பட்ட திரைப்படம் கண்ணகி. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு படத்திற்கான அறிவிப்பு வெளியாகிய போதும், கொரோனா உட்பட பல காரணங்களால் படம் தள்ளிப்போய் தற்போது வெளியாகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கண்ணகி திரைப்படத்தில் உள்ள பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. படம் வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.