கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கள்ளக்காதல் மோகம்.. கணவரை கொன்றுதூக்கிய மனைவி.. திருமணத்திற்கு முந்தைய காதலால் விபரீதம்.!
திருமணத்திற்கு முன்பு உண்டான காதலை மறக்க முடியாத பெண், காதலரை திருமணத்திற்கு பின்னர் கள்ளக்காதலராக்கி கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டம், சிக்கரூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாதிக் (வயது 30). இவரின் மனைவி சல்மா (வயது 25). தம்பதிகளுக்கு கடந்த 2021 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் தற்போது வரை குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்து கள்ளக்காதல்; சொந்த மனைவி மீது ஆசிட் வீசி அதிர்ச்சி தந்த கணவன்.!
கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்
இதனிடையே, சல்மா திருமணத்திற்கு முன்னர் ஜாபர் (வயது 28) என்ற நபரை காதலித்து வந்தார். வேறொருவருடன் திருமணம் முடிந்தபோதிலும், சல்மா தனது காதலருடன் நெருக்கம் காண்பித்தார். மேலும், அவ்வப்போது காதல் ஜோடி கள்ளக்காதல் ஜோடியாக மாறி, தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
இந்த விவகாரம் சாதிக்-க்கு தெரியவரவே , அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும், கள்ளக்காதலை கைவிடுமாறும் கோரிக்கை வைத்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாத சல்மா, கடந்த செப்.25 அன்று கணவருடன் தகராறு செய்துள்ளார்.
கணவர் கொலை
மேலும், தனது கள்ளக்காதல் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்யத் திட்டமிட்டு, காதலர் ஜாபரிடம் கூறியுள்ளார். இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று உறங்கிக்கொண்டு இருந்த சாதிக், கள்ளக்காதல் ஜோடியால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளனர்.
அவர் இறந்தது தெரியாமல் ஆத்திரம் தீராது மரக்கட்டையால் தாக்குதல் நடந்துள்ளது. பின் உடலில் இருந்த இரத்தக்கறைய அகற்றிவிட்டு, சாதிக் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமடப்பட்டுள்ளது. குடும்பத்தினரும் இறுதிச்சடங்கு மேற்கொண்டு உடலை நல்லடக்கம் செய்தனர்.
இருவரும் கைது
கணவரை இழந்த துக்கம் கண்ணில் தெரியாமல், சல்மா கள்ளகாதலருடன் நெருக்கம் காண்பிக்கவே, சந்தேகமடைந்த சாதிக்கின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடி இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சகோதரியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ரௌடியை சரமாரியாக வெட்டிக்கொண்ட சகோதரர்; திருச்சியில் சம்பவம்.!