"ஜப்பான் - மேட் இன் இந்தியா" மாஸாக வெளியான ஜப்பான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!



karthi-japan-movie-first-look-video-released-today

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜப்பான். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வருகின்ற தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாக இருப்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ரஜினி முருகன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Karthi

கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு  இத்திரைப்படத்தில் ஜப்பான் யார் என்று அறிமுக வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த வீடியோ  ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Karthi

கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் அவரது கதாபாத்திரமான வந்தியத்தேவன் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட ஒன்று. இதனைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் ஜப்பான் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.