#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேவர் மகன் 2 முடக்கப்படும் என கூறும் கிருஷ்ணசாமி: பதிலடி அறிக்கை விட்ட கருணாஸ்!.
தேவர் மகன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுத்தால் அந்த படம் முடக்கப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கூறியிருந்தார்.
கிருஷ்ணசாமியின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பரபரப்பாக பேசியுள்ளார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்க வேண்டும்?. அதற்க்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? என்பதை படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்து கொள்வார்கள்.
படத்திற்கு இந்த பெயர் வை, இந்த பெயரை வைக்காதே என்று நீங்கள் முடிவு செய்யக்கூடாது. தேவர் மகன் படத்தில் உள்ள எந்த காட்சியாவது இரு சமூகத்திடையே கலவரம் வரும் வகையில் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்த படத்தில், இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் தேவர் மகன். அந்த படத்தின் இறுதி காட்சியில் அனைவரும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி கமல்ஹாசன் பேசியிருப்பார்.
சில படங்களில் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைத்து இயக்குனர்கள் படம் எடுக்கின்றனர். அப்போது உங்களை போன்று உள்ளவர்கள் வாயை திறக்காமல் இருந்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவர் சமுதாயத்தை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை வரலாற்று படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். தங்களுக்கும் அப்படி ஏதாவது வரலாறு இருந்தால், நீங்களும் அதனை திரைப்படமாக எடுக்கலாம். அதனை யாரும் தடுக்க மாட்டார்கள் என கூறினார்.