கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. சிறுமியின் அந்தரங்க போட்டோ வாங்கி மிரட்டல்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்.!
கரூர் மாவட்டம் விஜயமங்கலம், வஞ்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ் (27). அங்குள்ள தாராபுரம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி, பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டவர் ஆவார்.
இருவரின் பழக்கமும் நாளடைவில் நட்பில் இருந்து காதலாக மாறியதாக தெரியவருகிறது. இதனிடையே, சிறுமியிடம் அவரின் நிர்வாண படங்களை கேட்டு காய்நகர்த்தி விக்னேஷ் பேசி இருக்கிறார். வயது கோளாறு, காதல் மயக்கத்தில் தன்னிலை மறந்த சிறுமியும் அதனை அனுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் மனைவியை மறந்து வேறொரு பெண்ணுடன் தார்மீக காதல்; திருமணம் முடிந்து அம்பலமான குட்டு.. வில்லங்கமான சம்பவத்தால் கம்பி எண்ணும் காவலர்.!
ஆசையை தூண்டி போட்டோ வாங்கி அதிர்ச்சி சம்பவம்
இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பெற்றுக்கொண்ட நபர், சில நாட்கள் கழித்து இருவரும் நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியிடம், உனது ஆபாச விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
இதனால் அதிர்ந்துபோன சிறுமி பெற்றோரிடம் விபரத்தை தெரிவிக்கவே, தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். அவனிடம் நடந்த விசாரணையில், இதுபோல பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: தாத்தா-பேரனின் உயிரை பறித்த மின்சாரம்; எமனாக மாறிய ஃபேன் சுவிட்ச்.! கரூரில் சோகம்.!!