#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓ.. இதான் மேட்டரா! அரைகுறை ஆடையில் பிரபல நடிகருடன் நெருக்கமாக காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடரில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்தவர் தர்ஷன். ஒரு சில காரணங்களால் அவர் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது ஹீரோவாக கன்னட நடிகர் சுவாமிநாதன் என்பவர் நடித்து வருகிறார்.
மேலும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில், கல்லூரி மாணவியாக நடித்து வருபவர் பிரியங்கா குமார். அண்மையில் அவர் காற்றுக்கென்ன வேலி தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என பிரியங்கா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பிரியங்கா நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரியங்கா Addhuri Lover என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரபல நடிகருடன் மாடர்ன் உடையில் மிக நெருக்கமாக உட்கார்ந்து இருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். அது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.