#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஆளே மாறிப் போயிருக்கும் கயல் ஆனந்தி!" லேட்டஸ்ட் போட்டோஷூட்!
2012ம் ஆண்டு "பஸ் ஸ்டாப்" என்ற தெலுங்குப் படம் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து தெலுங்கில் மேலும் இரண்டு படங்கள் நடித்த இவர் 2014ம் ஆண்டு "பொறியாளன்" படத்தில் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் கயல், விசாரணை, சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆனந்தி.
"கயல்" படத்தில் இவரது கேரக்டர் பெயர் கயல்விழி. அதிலிருந்து இவரை ரசிகர்கள் 'கயல்' ஆனந்தி என்றே அழைத்து வருகின்றனர். மேலும் பரியேறும் பெருமாள் படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் துணை இயக்குனர் சாக்ரடீஸை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கயல் ஆனந்தி, சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "அட! நம்ம கயல் ஆனந்தியா இது? அடையாளமே தெரியல!" என்று கூறி வருகின்றனர்.