#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒருவழியாக கயல் சீரியலில் தேவிக்கு திருமணம் முடிந்துவிட்டது.. ஆனால் அடுத்த ட்விஸ்ட்.! எப்டிமா தாங்கும் இந்த கயல்.!!
சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் காலை தொடங்கி இரவு வரை மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் தான் கயல். மேலும், சன் டிவி சீரியல்களில் டிஆர்பி வரிசையில் முன்னணியில் இருப்பது கயல் சீரியல்தான்.
தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய வருமானத்தை வைத்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.
தற்போது சீரியலில் தன்னுடைய தங்கை தேவியின் திருமணத்தை நடத்தி வைக்க கயல் போராடுகிறார். இதனால் பல தடைகள் வருகிறது. இதையெல்லாம் எதிர்கொண்டு கயல் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். இந்த சீரியலில் கயல் படும் கஷ்டத்தை பார்த்து எப்போதான் தேவியின் திருமணம் நடக்கும்.? என கருத்துக்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோட்டில் கயல் தங்கை தேவிக்கு ஒருவழியாக திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் அடுத்த ட்விஸ்ட்டாக கயல் தனது தங்கை தேவிக்கு போட்ட நகைகள் அனைத்தும் மாறியுள்ளது. அய்யயோ நாம் வாங்கிய நகைகள் என்னவாயிற்று என்று ஷாக் ரியக்சனுடன் சனிக்கிழமை எபிசோட் முடிந்தது. இதனால் மீண்டும் ரசிகர்களுக்கு கயல் சீரியல் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.