அடடே இந்த க்யூட்டான குட்டி பாப்பா விஜய் படம் நடிகையா.? அதிர்ச்சியில் வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..



Keerthi suresh childhood photos viral

தமிழ் திரைஉலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். சென்னை பொண்ணான கீர்த்தி சுரேஷ் நடிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.

keerthi

இவரின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படம் பெரிதும் இவருக்கு கை கொடுக்கவில்லை.
தொடர்ந்து படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பாம்பு சட்டை, நானும் லோக்கல், தானா சேர்ந்த கூட்டம், பைரவா போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.

keerthi

இது போன்ற நிலையில், கீர்த்தி சுரேஷ் பற்றி சர்ச்சைகளும், வதந்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இதையெல்லாம் கண்டு கொள்ளாத இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் கீர்த்தி சுரேஷின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் வாயடைத்து போய் ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.