கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட கேரள பெண்... தேனியில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு.!! விசாரணையில் அதிர்ச்சி.!!
கேரளாவை சேர்ந்த மாணவி தமிழகத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
நர்சிங் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்
தேனி மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் மாணவியை கடத்திச் சென்ற மர்ம கும்பல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு
இதனைத் தொடர்ந்து மாணவியை தேனியில் இருந்து திண்டுக்கல் அழைத்து வந்த மர்ம கும்பல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர். ரயில் நிலையத்தில் காயமடைந்த நிலையில் தனியாக இருந்த மாணவியை மீட்ட காவல்துறையினர் திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: தொடர் பாலியல் வன்புணர்வால் கர்ப்பமான சிறுமி... அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம் .!!
வழக்கு பதிவு செய்து விசாரணை
மேலும் இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பந்தம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை பலாத்காரம் செய்த கும்பலையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. சமீப காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை அச்சமடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: சமைக்கலயான்னு கேட்டது ஒரு குத்தமாயா .." கழுத்தறுக்கப்பட்டு கணவன் படுகொலை.!! மனைவி வெறி செயல்.!!