திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முத்து படத்தை கண்டுகளித்த படக்குழு: ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் அறிவிப்பை கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்.!
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதா ரவி, ரகுவரன், வடிவேலு, செந்தில், பொன்னம்பலம், விசித்ரா, ஜெயபாரதி உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து. ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
கடந்த 1995ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம், ரஜினிகாந்துக்கு சீனா, ஜப்பான், மலேஷியா நாடுகளில் ஏகபோக வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு இன்றும் ஜப்பானில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஜப்பானில் அன்றைய அக்காலகட்டத்திலேயே மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தின் வசூலை, பல ஆண்டுகள் கடந்து சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முறியடித்தது.
இந்நிலையில், இன்று முத்து திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை ரோகினி திரையரங்கில் கே.எஸ் ரவிக்குமார், மீனா, வைரமுத்து, ஏ.ஆர் ரஹ்மான் உட்பட பலரும் நேரில் வந்து முதல் காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் நன்மதிப்பை பெற்ற முத்து திரைப்படத்தை பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். படத்தின் முடிவுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் பேசிய கே.எஸ் ரவிக்குமார், அடுத்ததாக படையப்பா ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்தார். இது பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
Director @ksravikumardir at @RohiniSilverScr
— Suresh balaji (@surbalutwt) December 8, 2023
Next #Padayappa rerelease 🔥🔥🔥#MuthuReRelease | #MuthuMovie | #Rajinikanth | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Jailer | #LalSalaam | #Thalaivar170 | #Thalaivar171 | @RohiniSilverScr pic.twitter.com/DFJwUY6EV4