#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிவி சீரியலின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும்.! நடிகை குஷ்பு விளக்கம்..!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் மத்திய அரசு வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள், மால்கள், படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பு டிவி சீரியலின் நிலையை பற்றி பேசியுள்ளனர்.
அதில் நடிகை குஷ்பு பெஃப்சி தலைவர் செல்வமணியிடமும், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் பேசியதாகவும், அதிக அளவிலான பரிசோதனைகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் 27 ம் தேதிக்கு பின்னரே படப்பிடிப்புகள் பற்றி பேசமுடியுமென கூறிவிட்டார்களாம்.
மேலும் மே 5 ஆம் தேதி படப்பிடிப்புகள் தொடங்கி மே 11 ஆம் தேதியில் இருந்து டிவி சீரியல்கள் ஒளிப்பரப்பாக வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் சொல்லி கொண்டு இருக்கின்றார்கள். அதனுடன் வெளி இடங்களுக்கு செல்லாமல், முக்கிய நபர்களை கொண்டு ஒரே நாளில் அதிகபட்ச எபிசோடுகளை படமாக்குங்கள் என கூறியுள்ளார்.