#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீர் திருமணம், 55 வயது எழுத்தாளரை கரம்பிடித்த நடிகை லட்சுமி மேனன்! வைரலாகும் புகைப்படம்.!
பிரபல பாலிவுட் சினிமாவில் நடிகையும், மாடலுமாக பிரபலமடைந்தவர் லட்சுமி மேனன். மேலும் இந்தியாவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர் சுஹெல் சேத்.
இந்நிலையில் 55 வயதான சுஹெல் சேத் 37 வயது நிறைந்த லட்சுமி மேனனை கிறிஸ்துமஸ் தினத்தன்று எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் நண்பர்களாக ஒருவருடம் பழகியநிலையில்,எங்களது நட்பு காதலாக மாறியது.
அதனை தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டு, கிறிஸ்துமஸ் அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டதாக லட்சுமி மேனன் கூறியுள்ளார்.
மேலும் இந்த திருமண விழாவில் பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.