#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உங்க அம்மாவை திட்டினா நீங்க சும்மா இருப்பீங்களா? கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.! ஏன் தெரியுமா?
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இவர் சினிமாவில் குணசித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருப்பவர்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து ஓவியங்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தில் இந்து கடவுள்களை பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளனர்.
இதனை அறிந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த ஓவியம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
If I offend your Mother , you will keep quiet? ! My religion is my Mother, I love mine & respect yours! What is this? Perversion? Sick mind?!!! Or is it one type of terrorism? https://t.co/VuQZWmKFQl
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 20, 2019
இதற்கு டுவிட்டரில் ஒருவர், இந்த ஓவியத்தில் கண்டனம் தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுள்ளார். உடனே லட்சுமி ராமகிருஷ்ணன் உங்க அம்மாவை திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?. எனக்கு என் மதம்தான் எனது அம்மா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார்.