#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை கௌதமியிடம் நில மோசடி.! கேரளாவில் 6 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.!
நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி புகார் ஒன்றை வழங்கினார்.
அந்தப் புகாரில் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் போன்ற பல்வேறு பகுதிகளில் தனக்கு சொந்தமான நிலங்களை அழகப்பழம் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார் அவருடைய இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட அழகப்பன் அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஆறு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பிறகு தலைமறைவாக இருந்து வந்த அழகப்பனையும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர் இந்த சூழ்நிலையில்தான் அழகப்பன் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனாலும் அந்த முன் ஜாமின் மனதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது இந்த சூழ்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மத்திய கூட்டுறவு காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.