#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லதா மங்கேஷ்கர் இறப்பதற்கு முன்பு நடிகர் பிரபுவுக்கு அனுப்பி வைத்த புகைப்படம்.!
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவர் குறித்த நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜி வீட்டில் தான் தங்குவாராம். இதற்காக சிவாஜி தனது வீட்டின் ஒரு பகுதியில் லதா மங்கேஷ்கருக்காக ஒரு குட்டி பங்களா ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளாராம்.
லதா மங்கேஷ்கரை விட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு வயது மூத்தவர். இருவரும் சம காலத்து கலைஞர்கள் என்பதால், சிவாஜி கணேசன், லதா மங்கேஷ்கர் இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. இதுகுறித்து நடிகர் பிரபு கூறுகையில், லதா மங்கேஷ்கர் எங்களது குடும்பத்தில் ஒருவர். ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர் எங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் இனிப்புக்களை அனுப்பி வைப்பார்.
மேலும், அவர் அவ்வப்போது எங்களுக்கு ஏதேனும் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். சில நேரங்களில் கடவுளின் புகைப்படங்களை அனுப்பிவைப்பார். அவர் மருத்துவமனையில் அனுமதியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூட எனக்கு சில புகைப்படங்களை அனுப்பினார். கடவுளர், ஷீரடி குரு பாபா, எனது அப்பா என மாறிமாறி இவர்களின் புகைப்படங்களை அனுப்பிவைப்பார் என தெரிவித்தார்.