#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெய் பீம் பட நடிகர் மணிகண்டன் மோதலா.. பதிவு வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்த லோகேஷ்.?
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி இயக்குனராக வளர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், கமலஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் மேடையில் 'ஜெய் பீம்' படத்தில் நடிகர் மணிகண்டனை அடிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியது வைரலானது. இதனையடுத்து மணிகண்டனும் லோகேஷ் கனகராஜுடன் சண்டை போடுவேன் என்று கூறினார்.
இதன்படி இருவரும் கமலின் தீவிர ரசிகர் என்றும் யார் கமலின் தீவிர ரசிகர் என்றும் போட்டியின் காரணமாக காமெடியாகவே பேசியிருக்கிறார்கள் என்று லோகேஷ் கனகராஜ் தரப்பில் விளக்கம் அளித்தனர்.
இதுபோன்ற நிலையில், தற்போது மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'குட் நைட்' திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மணிகண்டனை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது வைரலாக உள்ளது.