#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. இவருமா?? ஜி.பி முத்துவை போலவே வெளியேறுகிறாரா இந்த பிக்பாஸ் போட்டியாளர்!! வெளிவந்த தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, மோதல் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பெரும் ஆர்மியை கொண்டு கடினமான போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தவர் சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமான ஜி.பி முத்து. அவர் தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என கதறி அழுததை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜி.பி முத்துவை போலவே விஜே மகேஸ்வரியும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு பிக்பாஸ் அனுமதி வழங்கமாட்டார் எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.