கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காதலிப்பதாக கூறி உல்லாசம்.!! கட்டாய கருக்கலைப்பு.!! தனியார் நிறுவன ஊழியர் கைது.!!
சென்னையில் 23 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தையில் கூறி ஏமாற்றிய இளைஞர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்லூரியில் மலர்ந்த காதல்
சென்னை பழைய வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கல்லூரியில் தன்னுடன் படித்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞரை காதலித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் காலங்களில் இருவரும் நெருக்கமாக காதலித்து உள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறிய அருண்குமார் இளம் பெண்ணுடன் பல நேரங்களில் உல்லாசமாக இருந்திருக்கிறார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.
கருக்கலைப்பு
இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்ததால் இளம் பெண் கர்ப்பமாகி இருக்கிறார். இதனை தனது காதலனிடம் கூறிய போது அவர் பப்பாளி பழ ஜூஸ் வாங்கி கொடுத்து கட்டாயமாக கருக்கலைப்புச் செய்திருக்கிறார். மேலும் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது திருமணத்திற்கு மறுத்த அந்த இளைஞர், இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் நட்பு.!! மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பலாத்காரம்.!!
காவல் நிலையத்தில் புகார்
இதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 17 வயது மாணவியுடன் உல்லாசம்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளி.!!