கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மது பழக்கத்திற்கு அடிமையானதால் ஆத்திரம்.!! மகனை அடித்து கொலை செய்த தந்தை.!!
விருதுநகர் மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையான மகனை, தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் சரணடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான மகன்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. 74 வயதான இவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சுப்பிரமணியன்(34) என்பவர் வேலைக்கு எதற்கும் செல்லாமல் மது அருந்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் இவருக்கு திருமணம் ஆகவில்லை.
அடிக்கடி தகராறு
எப்போதும் மது போதையில் இருக்கும் சுப்ரமணியன் குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தனது தாய், தந்தையிடமும் தகராறு செய்து வந்திருக்கிறார். மேலும் தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்வதால் அக்கம்பக்கத்தினருக்கும் மிகப்பெரிய தொந்தரவு இருந்திருக்கிறது. இது ராமசாமிக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தந்தை உயிரிழப்பால் வேதனை: மகனும் வருத்தத்தில் விபரீதம்.!
கட்டையால் அடித்து கொலை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது குடித்து விட்டு வந்த சுப்பிரமணியன் தகராறு செய்துவிட்டு வீட்டு வாசலில் படுத்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து சுப்பிரமணியத்தை தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து விஏஓ முன்பு சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமி வீட்டிற்கு சென்று கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மது பழக்கத்திற்கு அடிமையான மகன் தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் மரணம்; போதையில் தள்ளாடி சோகம்.. இழப்பீடு கேட்கும் இ.பி.எஸ்.!