கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கள்ள உறவுக்காக நண்பன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!
தர்மபுரி மாவட்டம் ஆரூரை அடுத்த கல்லடிபட்டி என்ற கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கல்லடிப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்த நபரின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜாராமன் என்று தெரியவந்தது. மேலும் இவருக்கு திருமணமாகி தமிழ் இலக்கியா என்ற மனைவியும் 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
இந்நிலையில் நேற்று இரவு ராஜாராமன் மற்றும் அவரது மனைவி தமிழ் இலக்கியா இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோயமுத்தூர் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறி பேருந்து நிலையம் வந்த ராஜாராமன் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலைக்கு அவரது மனைவி தமிழ் இலக்கியாவின் கள்ளக்காதல் தான் காரணம் என காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜாராமனின் மனைவி தமிழ் இலக்கியா தனியார் அழகு நிலையத்தில் வேலை செய்திருக்கிறார். அப்போது இலக்கியாவிற்கு தன்னுடன் பணிபுரியும் சிவராமன் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதி முன் பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; எல்.முருகன், அதிமுக கண்டனம்.!
கள்ளக்காதலுக்காக துரோகியாக மாறிய நண்பன்
மேலும் சிவராமன் தனது கள்ளக்காதலியின் கணவன் ராஜாராமனுடன் நட்பாகவும் பழகி வந்திருக்கிறார். இந்நிலையில் ராஜாராமன் மற்றும் தமிழ் இலக்கியா இடையே ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் இருந்த ராஜாராமனின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார் சிவராமன். இதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கியா மற்றும் சிவராமன் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறை அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "என் சாவுக்கு வராத; நல்லா இரு.." தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி.!! கணவன் கைது.!!