#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. மனுஷன் வேற லெவல்! 35 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன் 37வது திருமணம்! வைரலாகும் வீடியோ!!
பழங்காலத்தில் அரசர்கள் சிலருக்கு பல மனைவிகளை திருமணம் செய்துகொண்டு, ஏராளமான குழந்தைகள் இருப்பர் என கூறுவர். ஆனால் தற்காலத்தில் ஒரு திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை வளர்த்து பெரிதாக்குவதே பெரிய சவாலாக உள்ளது. இந்தநிலையில் நபர் ஒருவர் 36 முறை திருமணம் செய்து 35 குழந்தைகள் மற்றும் 126 பேரை குழந்தைகள் முன்னிலையில் தற்போது மீண்டும் 37 வது திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 36 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களில் தற்போது 28 மனைவிகள் உயிரோடு உள்ளனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் 35 குழந்தைகள் உள்ளனர். மேலும் 126 பேரக்குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
37th marriage in front of 28 wives and 135 children and 126 grandchildren.
— JP 🇮🇳 (@JPulasaria) June 6, 2021
😭😭😭😭 pic.twitter.com/Fa0EEZcpRX
இந்த நிலையில் தற்போது அந்த நபர் மீண்டும் 37 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 28 மனைவிகள் 35 குழந்தைகள் 126 பேரகுழந்தைகள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக விமரிசையாக நடைபெற்ற அந்த திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தத் திருமணத்தில் அனைவரும் கைதட்டி மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த நபருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் ரொம்ப தைரியம்தான் என கமெண்டு செய்து வருகின்றனர்.