மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
மனைவிக்காக போட்ட ஸ்கெட்ச்.! மாமனார் உள்ளே நுழைந்ததால் நேர்ந்த கொடூரம்.! பகீர் சம்பவம்!!
தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பெரியார் நகரில் வசித்து வந்தவர் 21 வயது நிறைந்த ராஜமனோகரன். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த மே 14 ஆம் தேதி குளியலறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது மகள் மனோரம்யா போலீசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ராஜமனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாமனாரை கொன்ற மருமகன்
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராஜமனோகரின் மகள் மனோரம்யா கணவர்தான் அவரை கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது. ராஜ மனோகரின் மூத்த மகள் மனோரம்யா. இவர் திருமண தகவல் மைய செயலி மூலம் ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிகார கணவனுடன் தினமும் நிம்மதியில்லா வாழ்க்கை; கணவனை குடும்பத்தோடு சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.!
மனைவிக்கு போடப்பட்ட ஸ்கெட்ச்
மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது. இதனால் மனைவியை கொல்ல திட்டமிட்ட அவர் தனது நண்பருடன் சுவர் ஏறி குதித்து மனோரம்யாவின் வீட்டிற்குள் சென்று குளியலறையில் பதுங்கி இருந்துள்ளனர். அப்பொழுது ராஜ மனோகரன் உள்ளே நுழைந்தநிலையில், சத்தம் போடாதவாறு அவரது வாயில் துணியை அமுக்கி அவர்கள் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்.. சென்னையில் பயங்கரம்.!