கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"என்னையே அடக்க பார்க்கிறாயா.." மனைவி படுகொலை.!! கணவன் தற்கொலை முயற்சி.!!
மது போதைக்கு அடிமையான கணவன், மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கணவனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மது பழக்கத்தால் தகராறு
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். 42 வயதான இவருக்கு சிவனம்மாள் என்ற பெண்ணுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கணவரிடம்மிருந்து பிரிந்து சென்ற சிவனம்மாள் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டிற்கு அழைத்து வந்து கொலை
இதனைத் தொடர்ந்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் சுரேஷ். மனைவி வீட்டிற்கு திரும்பிய பிறகும் மீண்டும் குடிப்பழக்கத்தை தொடங்கிய சுரேஷ் மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்திருக்கிறார். திடீரென சுரேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை திருநெல்வேலியில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் சிவனம்மாள். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு வெடித்திருக்கிறது. இந்நிலையில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சிவனம்மாலை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார் சுரேஷ்.
இதையும் படிங்க: "எங்கள பிரிக்க பாக்குறியா நீ.." கணவன் படுகொலை.!! கள்ளக்காதலன் கொடூர செயல்.!!
கதறிய குழந்தைகள்
ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைப் பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்த பின்பு அரிவாளுடன் வெளியே வந்த சுரேஷ் பேருந்தை நிறுத்தி தகராறு செய்திருக்கிறார். அப்போது பொதுமக்கள் ஒன்று கூடி அவரை பிடிக்க முயன்றதால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சிவனம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் குளத்தாங்கரையில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்ய முயன்ற போது கிணத்தில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்த சுரேசை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கோவை: "மகனைத்தேடி நாங்களும் போறோம்" - கடிதம் எழுதிவைத்து தம்பதி விபரீதம்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!