"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"அவ சரி இல்ல சார்: அதான் போட்டுட்டேன்.." ஒரு போன் காலில் பதறிய போலீஸ்.!! கடைசியில் ட்விஸ்ட்.!!
சென்னையை அடுத்த படப்பையில் 2 குழந்தைகளின் தாய் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய கணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனைவி மீது சந்தேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ராஜ். இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். கோபால் ராஜிற்கு பரமேஸ்வரி என்ற பெண்ணுடன் 2014 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கோபால் ராஜிக்கு தனது மனைவியின் நடத்தையில் நீண்ட காலமாக சந்தேகம் இருந்து வந்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது.
போலீசுக்கு போன் செய்து வாக்குமூலம்
இந்நிலையில் நேற்று மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்த கோபால் ராஜ், தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். மேலும் தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் அவரை கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது 2 குழந்தைகளையும் உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!
குற்றவாளிக்கு வலை வீச்சு
இந்நிலையில் காவல் நிலையத்தில் சரணடைவதாக கூறிய கோபால் ராஜ் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பரமேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கோபால் ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: #JustIN: கணவன் - மனைவி தகராறில் கொடூரம்.. குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.. உறவினர்கள் கண்ணீர்.!