#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடா... இவரா... AK 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை... யார்னு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடக்கூடிய நடிகர்களுள் ஒருவர் தல அஜித். இவர் கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அஜித் 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது புதிய தகவலாக ஏகே 61 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சு வாரியர் இதற்கு முன்னதாக நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.