கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ரூ.25 இலட்சத்தை ஏமாற்றிவிட்டு ஓட்டம்பிடித்த மகளிர் மன்ற குழுத் தலைவி.. 30 பேர் கண்ணீருடன் புகார்.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி சத்யா. இவர் மகளிர் மன்ற குழு தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார். இவரை நம்பி பலரும் பல பெயர்களில் வங்கிகளில் வழங்கப்படும் கடனை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனிடையே, மொத்தமாக 30 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.25 இலட்சம் பணம் பெற்றுக்கொண்ட பெண்மணி, வீட்டை காலி செய்து தலைமறைவாகி இருக்கிறார். இதனால் பணத்தை வாங்கிக்கொடுத்த பெண்களிடம், பணம் வசூலிக்கும் அதிகாரிகள் கறாராக பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடமானம் வைத்த நகைகளின் அளவு குறைந்ததால் அதிர்ச்சி; இந்தியன் வங்கி பணியாளர்கள் மீது புகார்.!
30 பேர் கண்ணீருடன் புகார்
இதனால் பதறிப்போன பெண்கள் கடந்த 3 மாதமாக போராடி, தற்போது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 30 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், வாழப்பதிந்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர்.
தாங்கள் கூலி வேலை செய்து அவருக்கு லோன் எடுத்துக்கொடுத்த நிலையில், தங்களின் நம்பிக்கையை உடைத்து, பணத்தை ஏமாற்றி பெண் தலைமறைவானதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தவித்து நிற்கின்றனர்.
மகளிரை முன்னேற்றுவதற்கு அரசு பார்த்துப்பார்த்து திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தினால், அதனை வைத்தும் திருட்டுக்கும்பல் பணம் சம்பாத்தித்து பலரின் வாழ்க்கை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.
இதையும் படிங்க: மாடு வாலில் ஜடை பின்னி அட்ராசிட்டி.. டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.!