#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பல முன்னணி ஹீரோக்களை தொடர்ந்து கோல்டன் விசா பெற்ற பிரபல நடிகை! அட.. யார்னு பார்த்தீங்களா!!
2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கெளரவிக்கும் வகையில்,10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை தொடங்கியது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்பட்டு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.
பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் ஏற்கனவே கோல்டன் விசா பெற்றுள்ளனர். மேலும் முன்னணி மலையாள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் மற்றும் இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோருக்கும் சமீபத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற விழாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித், மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளார்.