#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய யோசனை! சிக்குமா தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே மிரட்டி வரும் ஒரு இணையதளம் தமிழ் ராக்கர்ஸ். எப்படிப்பட்ட இயக்குனர், ஹீரோ, தயாரிப்பு நிறுவனங்களாக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படம் திரைக்கு வெளியாகும் அன்றே இணையதளத்தில் வெளியிட்டு அணைத்து திரைத்துறையினருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியதிலிருந்து திருட்டு விசிடிகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. பெரும்பாலும் மொபைல் போன்களில் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து புதிய படங்களை பார்த்து விடுகின்றனர். இதனை தமக்கு சாதகமாக்கிய தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் எந்தப் படம் வெளியானாலும் அதே நாளில் தியேட்டர்களில் எடுக்கப்பட்ட பிரிண்ட்டினை பதிவேற்றம் செய்து விடுகிறது. அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அதே படத்தின் HD ப்ரிண்டையும் வெளியிட்டு விடுகிறது.
இதனால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை பலர் தவிர்க்கின்றனர். "நமக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்கும்போது எதற்கு வீணாக தியேட்டரில் டிக்கெட் எடுத்து படம் பார்க்க வேண்டும்" என்ற எண்ணம் பலருக்கு தோன்றிவிடுகிறது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் உண்டாகிறது.
இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க திரைத்துறையினர் சார்பிலும் அரசு சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் அந்த இணையதளத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயன்படுத்தும் டெக்னாலஜியை இங்கு உள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் இதனைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் மட்டுமே முடியும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அழைப்பிற்கு அனைத்து திரையுலகினரும் ஒத்துழைப்பு அளித்து தமிழ் ராக்கர்ஸை ஒழித்து கட்டுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.