வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நடிகை பானு பிரியா விவகாரத்தில் திடீர் திருப்பம்! மகளும், தாயாரும் சிறையில் அடைப்பு!
சில நாட்களாக பிரபல தமிழ் நடிகை பானு ப்ரியாவும் அவரது சகோதரரும் தங்கள் வீட்டில் வேலை பார்த்த சிறுமியை அடைத்துவைத்து, பாலியல் கொடுமைகள் செய்ததாக அந்த சிறுமியின் தாயார் புகார் அளித்தார். மேலும் அந்த சிறுமிக்கு 14 வயதுதான் என்பதால், குழந்தையை வேலைக்கு வாய்த்த காரணத்தாலும், கொடுமைகள் செய்த காரணத்திற்காகவும் பானு ப்ரியாவும் அவரது சகதோரரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காவல் துறையினரால் கைதுசெய்யப்படலாம் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமியும், அவரது தாயாரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பளம் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் சந்தியாவின் தாயார் பத்மாவதி புகார் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து சந்தியாவின் மீது திருட்டுக் குற்றம் சாட்டிய பானுப்ரியா, சந்தியாவுக்கு வயது 14 தான் என்பது தனக்குத் தெரியாது என்று மழுப்பினார்.
இந்நிலையில் வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்து பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் கடந்த மாதமே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று (பிப்ரவரி 1) போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் கொடுத்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சென்னை பாண்டி பஜார் காவல்துறையினர் சிறுமியையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். தற்போது சிறுமியின் தாயார் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர்.