வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நாட்டாமை பட டீச்சரின் தற்போதைய நிலை? இப்ப என்ன பண்றாங்க தெரியுமா?
இன்றைய சினிமாவில் மலர் டீச்சர், பவி டீச்சர் என எத்தனை டீச்சர்கள் பிரபலமாக இருந்தாலும் 90's கிட்ஸ் மத்தியில் அன்று தொடங்கி இன்றுவரை பிரபலமாக இருக்கும் ஒரே டீச்சர் நம்ம நாட்டாமை படத்தில் வரும் டீச்சர்தான்.
இவரது உண்மையான பெயர் ராணி. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் சினிமாவில் தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை பட்டாராம். ஆனால், நாட்டாமை படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் கேட்டுக்கொண்டதை அடுத்து நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தாராம் ராணி.
நாட்டாமை படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இவரை மேலும் பிரபலமாக்கியது. குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரை திருமனம் செய்துகொண்ட ராணி ஒருசில தெலுங்கு படங்களில் மட்டும் தலைகாட்டுகிறர். மற்றநேரங்களில் பக்காவான ஹவுஸ் வொய்பாக குடும்பத்தை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். ராணிக்கு இப்போது ஒரு மகள் உள்ளார். அவர் கல்லூரியில் படித்து வருகிறாராம்.