#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட தோல்வியால் வருத்தம் இல்லை.. கற்றுக்கொண்டது அதிகம் - நாக சைதன்யா.!
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் தூத்தா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும், இதில், நாக சைதன்யா உடன் பார்வதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வெப் தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது நாகா சைதன்யா செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அதன்படி தனது இந்திய அறிமுகம் குறித்து பேசிய அவர், எனது இந்திய அறிமுகமான 'லால் சிங் சத்தா' சரியான வரவேற்பை பெறவில்லை என்று என்னை கேட்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. எனக்கு அமீர்கான் உடன் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அதனால் அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி தான் என்று அவர் கூறியுள்ளார்.