#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாகசைதன்யாவுக்கு விரைவில் திருமணம்.? பெண் இவரா.?!
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மூத்த மகன் தான் நாக சைதன்யா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான கஸ்டடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்ததாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.