கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பழம்பெரும் நடிகை! நெகிழ்ந்து பாராட்டிய நடிகர் நாசர்!! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் படைத்து பழம்பெரும் நடிகையாக வலம் வந்தவர் சவுக்கார் ஜானகி. 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது 19 வயதில் தெலுங்கு சினிமாவில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளிவந்த சவுக்கார் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனாலே அவர் சவுக்கார் ஜானகி என அழைக்கப்பட்டார். இவருக்கு குடியரசு தினத்தன்று மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நடிகர், நடிகைகள் சார்பில் அவருக்கு வாழ்த்துக் கூறி நடிகர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!!
தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.