#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை இயக்குவது யார்?.. யூடியூபருக்கு கிடைத்த அட்டகாசமான வாய்ப்பு.!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் முதல் பல முன்னணி நடிகர்களுடனும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நயன்தாரா நடிக்கும் 75 ஆவது படத்தை சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிகேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் நிலையில், நடிகர் ஜெய், சத்யராஜ் உட்பட பலரும் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து, பிரபல யூட்யூபரான டூட் விக்கி இயக்கும் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.