மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நஸ்ரியா - பஹத் பாசிலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்.!
தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதனைத் தொடர்ந்து இவர் நையாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார்.
இதனிடையே பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா 43 திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நஸ்ரியா - பஹத் பாசில் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், நஸ்ரியாவின் மாமனார் பாசில் தமிழ் மற்றும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேலை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.