கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நெல்லை அருகே பயங்கரம்... இளம் பெண் அடித்து கொலை.!! 3-வது கணவர் கைது.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 நபர்களை திருமணம் செய்த பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பியோடிய கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3 திருமணம் செய்த பெண்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. 30 வயதான இவருக்கு 9 வயதில் மகளும் 6 வயதில் மகனும் உள்ளனர். ஏற்கனவே 2 முறை திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் மூன்றாவது முறையாக முருகன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
வீட்டில் சடலமாக கிடந்த முத்துலட்சுமி
இந்நிலையில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இரவு தனது தந்தை வீட்டில் தலையில் காயத்துடன் சடலமாக கடந்திருக்கிறார் முத்துலட்சுமி. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: திருமணமான 45 நாளில் நடந்த சோகம்.!! கணவன் கண் முன்னே துடிதுடித்து பலி.!!
கைது செய்யப்பட்ட மூன்றாவது கணவன்
இந்நிலையில் முத்துலட்சுமியின் மூன்றாவது கணவன் முருகன் தலைமறைவாக இருந்ததால் அவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரைத் தேடி வந்த காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முத்துலட்சுமியை கட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிகார கணவன்... கள்ளக்காதலுடன் சேர்ந்து எமலோகம் அனுப்பிய மனைவி.!!