#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணமாகி 13 ஆண்டுக்கு பின் பிறந்த மகள்.! சீரியல் நடிகை நீலிமா ராணி வைத்த பெயர் என்ன தெரியுமா.?
குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி பல்வேறு சீரியல்கள் மூலமும், படங்கள் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நீலிமா ராணி. இவர் ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
நீலிமா ராணி பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இதன் பின்னர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த இவர், அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். இதனிடையே, சில மாதத்திற்கு முன் நீலிமாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட திருமணமாகி 13 ஆண்டுக்கு பின் தான் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் வைத்துள்ளார்.