#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா... "அடுத்த 7 வருசத்துக்கு செம பிஸி லிஸ்ட்டுடன்..." இயக்குனர் வெற்றிமாறன்.!
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் பாலு மகேந்திரனிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
பொல்லாதவன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் பல தேசிய விருதுகளை குவித்தது. ஆடுகளத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உருவான விசாரணை வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனர் என்ற அந்தஸ்தை வெற்றிமாறனுக்கு கொடுத்தது.
தற்போது அடுத்த ஆறு முதல் ஏழு வருடங்களுக்கு வெற்றிமாறன் மிகவும் பிசியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் வெற்றிமாறன். இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு வாடிவாசல் திரைப்படத்திற்கான பயிற்சிகளில் நடிகர் சூர்யா ஈடுபடுவார் என்று தெரிகிறது.
வாடிவாசல் திரைப்படத்தை முடித்த பிறகு தனுஷ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து வடசென்னை 2 படத்தை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து அற்புதம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய இணையதள தொடர் ஒன்றை ஜி5 ஓடிடி தளத்திற்கு இயக்க இருக்கிறார். இந்த இணையதள தொடருக்கு பிறகு தளபதி விஜயுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் அதன் பிறகு ஜூனியர் என்டிஆர் உடன் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் கோலிவுடில் பிசியான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் வலம் வருகிறார்.