#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சசிகுமாருடன் முதன் முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
சுப்ரமணியபுரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சசிகுமார். இயக்குனரான இவர் பலவேறு வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். பல்வேரு வெற்றிப்படங்களில் கதாநாயகனாவும் நடித்துள்ளார் சசிகுமார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவேற்பு உள்ள நடிகர்களில் சசிகுமாரும் ஒருவர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒருசில படங்கள் தோல்வியை தழுவியது. கடைசியாக இவர் நடித்த அசுரவாதம் படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இறுதியாக சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நண்பராக சிறு வேடத்தில் நடித்திருந்தார் சசிகுமார்.
இந்நிலையில் சசிகுமார் தற்போது 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர் இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடாத அந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிக்கி கல்ராணி சசிகுமாருடன் நடிப்பது இதுவே முதல்முறை.