#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெரும் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் பிரபல சீரியல்! என்ன சர்ச்சை? எந்த சீரியல் தெரியுமா?
வெள்ளி திரைக்கு நிகராக இன்று சின்னத்திரையும் வளர்ந்துவிட்டது. சின்னத்திரையின் இந்த அதீத வளர்ச்சிக்கு கரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் காரணம். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி இன்று அணைத்து தரப்பு வயதினரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதில் மிகவும் புகழ் பெற்ற சீரியல்களில் ஓன்று அரண்மனை கிளி. இந்த தொடரில் கடந்த 29 ஆம் தேதி கதையின் நாயகன் ஒரு பொற்கொல்லரிடம் தாலி செய்து கொட்டுவருமாறு கூறுவார்.
அந்த பொற்கொல்லர் தாலி செய்து எடுத்து வரும்போது அந்த கதைப்படி கதையின் கதாபாத்திரங்கள் சிலர் அந்த பொற்கொல்லரை தரக்குறைவாக பேசுவதுபோல சில வசனங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து இந்த காட்சிகளை நீக்க வேண்டியும், குறிப்பிட்ட காட்சிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியும் விஜய் டிவி அரண்மனை கிளி தொடருக்கு அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.