#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. தனுஷின் கர்ணன் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு இதுதானா!! செம மாஸா இருக்குல்ல.. வெளியான புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் அவருடன் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஏராளமான பிரபலங்களும் இப்படம் குறித்து பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்ணன் படம் வசூல் சாதனையும் குவித்து வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் படத்தின் தலைப்பும் எனலாம். ஆனால் இப்படத்திற்கு முதன்முதலில் பாண்டிய ராஜாக்கள் என தலைப்பு வைத்தனராம். பின்னரே கர்ணன் என வைத்தார்களாம். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் படத்தின் கலை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தலைப்பு வைத்து இருந்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.