கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஒரு நல்ல செய்தி.. ஐஸ்வர்யாவிற்காக கார் வாங்கியிருக்கும் கண்ணன்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். டி ஆர் பி யில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் இந்த சீரியலின் எபிசோட்கள் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கூட்டு குடும்பங்களை மையப்படுத்தி எடுத்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பிகள் சண்டை போட்டுக்கொண்டு தனித்தனியே குடும்பம் நடத்துவது போல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்திருக்கும் நான்காவது தம்பியான கண்ணன் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். புதிய கார் வாங்கி காருடன் சேர்த்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதன்படி கண்ணன் ஐஸ்வர்யாவிற்காக தான் கார் வாங்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர் கண்ணனுக்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.