#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி இப்படித்தான்! பாடல் பெயரால் வெடித்த சர்ச்சை! கர்ணன் பட இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் இறுதிகட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் கர்ணன் படத்தில் பண்டாரத்தி புராணம் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த புராணம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக பெரும் சர்ச்சைகள் எழுந்தது. மேலும் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்குகளும் தொடங்கப்பட்டது.
#karnan 🐘 pic.twitter.com/JNwtRcEBcW
— Mari Selvaraj (@mari_selvaraj) March 25, 2021
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கர்ணன் திரைப்படத்தில் வரும் பண்டாரத்தி என்னும் கதாபாத்திரம் இனி ‘மஞ்சனத்தி’ என அழைக்கப்படும் என்று தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.